×

காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்: வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பால் சென்னை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை: வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. குறிப்பாக ஏப்ரல் மாதம் பல மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வெயிலின் தாக்கத்தால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படுகின்ற கத்தரி வெயில் வருகிற 4ம் தேதி தொடங்க உள்ளது. கத்திரி வெயில் தொடங்கிய பின்னர் மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரம் சென்னையில் காலை நேரத்தில் வெளியே வந்தால் மயக்கமடையும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகின்றது. உடை முழுவதும் சிறிது நேரத்திலே வியர்வையால் ஈரமாகும் நிலை உள்ளது.

பஸ், மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்கள் அனல் காற்றால் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மக்களுக்கு சென்னை மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுரைகளை நேற்று வழங்கி உள்ளது.  அதாவது வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம். நீர்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். அவசியமில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளையே சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

The post காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்: வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பால் சென்னை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai district administration ,Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...